BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, July 18, 2008

இனியொரு விதி செய்வோம்


நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது

இறைவன் அருளால் உயிர் பெற்றோம்
அவனது அன்பால் உருவுற்றோம்
சிந்தனை என்னும் திறன் பெற்றோம்
புன்னகை என்னும் வரம் பெற்றோம்

குயில்களுக்கு இசை புரியும்
நாய்களுக்கு மோப்பம் தெரியும்
மயில்கள் எல்லாம் நடனம் முயலும்
நம்மால் மட்டுமே புன்னகை இயலும்

உழைத்து சேர்ப்பதை எறும்புகள் புரியும்
தின்று கொழுப்பதை பன்றிக்கும் முடியும்
பகைவனை அழிப்பதை மிருகங்கள் செய்யும்
மனிதர்கள் நாம் நண்பர்கள் செய்வோம்

தோல்வி இன்றி இறப்பவன் சாதனையாளன்
வறுமை இன்றி இறப்பவன் உழைப்பாளி
ஆசையின்றி இறப்பவன் ஞானியாவான்
பகைவனின்றி இறப்பவன் இறைவனாவான்

ஊருக்கும் உலகுக்கும்
நண்பனாய் வாழ்ந்து நண்பனாய் இறப்போம்
நட்பை வளர்த்து நண்பர்கள் சேர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம்
அதை விட அவசியம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்பது"

நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடித்தால்
இனமோதலும் மதச் சண்டைகளும் காணாமல் போகும்

இனியொரு விதி செய்வோம்
இனியாவது ஒரு விதி செய்வோம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்போம்"

2 comments:

Bhushavali said...

அற்புதமான கோர்வை... நம் நாடு வளம் பெர இந்த விதி நிச்சயம் தேவை...

ramesh sadasivam said...

:) உண்மை தான். நன்றி, மித்ர்.