BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, July 13, 2008



இது நாள் வரை...
நான் ரசிகன்
நம் வயது பெண்களுக்கு
நிறமுடைய பூக்களுக்கு
தொட்டுச்செல்லும் தென்றலுக்கு
தொடர்ந்து வரும் பாடலுக்கு

இப்பொழுதெல்லாம்
இவை எதுவும்
எனக்குப் பிடிக்கவில்லை
ஆனாலும் நான் ரசிகன்

நீ தந்த காதலுக்கு
தினம் உதிர்க்கும் பார்வைக்கு
மனம் உயிர்க்கும் புன்னகைக்கு
நான் காதலிக்கும் உனக்கு
உன்னை காதலிக்கும் எனக்கு

2 comments:

Anonymous said...

நல்ல சந்தம் கொண்ட கவிதை...வாழ்த்துகள்

ramesh sadasivam said...

நீங்கள் என் கவிதைகளை படிப்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது....